விசா இன்றி தங்கள் நாட்டிற்கு வருகை தருவதற்கு , 20 நாடுகளுக்கு இந்தோனேசிய சுற்றுலாத்துறை அமைச்சகம் தீர்மானித்துள்ளது.
அவுஸ்திரேலியா, இந்தியா, சீனா, தென்கொரியா, அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் ஜேர்மன் உள்ளிட்ட 20 நாடுகளுக்கு விசா இன்றி வருகை தருவதற்கு தீர்மானித்துள்ளதாக இந்தோனேசிய சுற்றுலாத்துறை அமைச்சர் சாண்டியாகோ ஊனோ தெரிவித்துள்ளார்.
சுற்றுலாப் பயணிகளை ஈர்த்தல் மற்றும் பொருளாதார வளர்ச்சியினை மேம்படுத்தல் உள்ளிட்ட காரணங்களுக்காக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.