நாட்டில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 80 ஆயிரத்திற்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன் அவர்களில் 16 ஆயிரத்து 948 பேர் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், கம்பஹா மாவட்டத்தில் 15 ஆயிரத்து 419 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
நாடு முழுவதும் 61 டெங்கு அபாய வலயங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், இந்த ஆண்டில் 47 பேர் டெங்கு நோயினால் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருப்பதையும், நுளம்புகள் பெருகும் இடங்களை அழிப்பதையும் உறுதி செய்யுமாறு தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.