வடக்கிற்கு நீர் வழங்குவதில் கவனம் செலுத்தி யாழ்ப்பாணத்திற்கு நதி ஒன்றை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு நீர்ப்பாசன அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் இன்று உரையாற்றிய அவர் இதனை தெரிவித்துள்ளார்.
“யாழ்ப்பாண நதி” என பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தின் முதற்கட்ட ஆய்வுகள் நெதர்லாந்து அரசினால் மேற்கொள்ளப்பட்டு, அடுத்த கட்டப் பணிகள் 2024 இல் ஆரம்பிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இத்திட்டத்தின் மூலம் வடக்கின் நீர்ப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என நம்புவதாக பவித்ரா வன்னியாராச்சி மேலும் தெரிவித்தார்.