பாகிஸ்தான் 19 வயதிற்குட்பட்ட மற்றும் ஆப்கானிஸ்தான் 19 வயதிற்குட்பட்ட அணிகளுக்கிடையில் இன்று (12.12) ICC அக்கடமி, டுபாய் மைதானத்தில் 19 வயதிற்குட்பட்ட ஆசிய கிண்ணத்தின் 9 ஆவது போட்டியாக நடைபெற்றது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி 83 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது. இந்த வெறியின் மூலமாக பாகிஸ்தான் அணி அடுத்த சுற்றுக்கு தெரிவாகியுள்ளது. இந்த தோல்வியின் மூலமாக ஆப்கானிஸ்தான் அணி அடுத்த சுற்று வாய்ப்பை இழந்துள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 48 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 303 ஓட்டங்களை பெற்றது. ஷஹசைப் கான் 79(95) ஓட்டங்களையும், ஷமில் ஹுசைன் 75(54) ஓட்டங்களையும், ரியாஸ் உல்லா 73(69) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் பரிடூன் டவூட்ஸை, பஷிர் அஹமட் ஆகியோர் தலா 3 விக்கெட்களையும், நசீர் கான் மரூப்கில், கலெல் அஹமட் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.
பதிலுக்கு துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் அணி 48.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 220 ஓட்டங்களை பெற்றது. இதில் நுமன் ஷா 54(78) ஓட்டங்களையும், வபியுல்லா தரகில் 32(34) ஓட்டங்களையும், பரிடூன் டவூட்ஸை 32(41) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் உபைத் ஷா, டயப் அரிப் ஆகியோர் தலா 3 விக்கெட்களையும், குபைப் கலில் 2 விக்கெட்களையும், ஷமில் ஹுசைன், அமிர் ஹசன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.
இந்த போட்டியின் நாயகனாக ஷமில் ஹுசைன் தெரிவு செய்யப்பட்டார்.
இந்தியா 19 வயதிற்குட்பட்ட மற்றும் நேபாளம் 19 வயதிற்குட்பட்ட அணிகளுக்கிடையில் இன்று ICC அக்கடமி 2, டுபாய் மைதானத்தில் 19 வயதிற்குட்பட்ட ஆசிய கிண்ணத்தின் 10 ஆவது போட்டியாக நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா அணி 10 விக்கெட்களினால் வெறி பெற்று அடுத்த சுற்று வாய்ப்பை பெற்றுள்ளது. இந்த தோல்வியின் மூலமாக நேபாளம் அணி அடுத்த சுற்று வாய்ப்பை இழந்துள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
முதலில் துடுப்பாடிய நேபாளம் அணி 22.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 52 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில் யாரும் சிறப்பாக பிரகாசிக்கவில்லை. பந்துவீச்சில் ராஜ் லிம்பனி 7 விக்கெட்களையும், ஆரத்யா ஷுக்லா 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.
பதிலுக்கு துடுப்பாடிய இந்தியா அணி 7.1 ஓவர்களில் விக்கெட் இழப்புகளின்றி 57 ஓட்டங்களை பெற்றது. இதில் அர்ஷின் குல்கர்னி ஆட்டமிழக்காமல் 43(30) ஓட்டங்களை பெற்றார்.
இந்த போட்டியின் நாயகனாக ராஜ் லிம்பனி தெரிவு செய்யப்பட்டார்.
இலங்கை 19 வயதிற்குட்பட்ட மற்றும் பங்களாதேஷ் 19 வயதிற்குட்பட்ட அணிகளுக்கிடையில் நாளை (13.12) ICC அக்கடமி, டுபாய் மைதானத்தில் 19 வயதிற்குட்பட்ட ஆசிய கிண்ணத்தின் 11 போட்டியாக நடைபெறவுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகம் 19 வயதிற்குட்பட்ட மற்றும் ஜப்பான் 19 வயதிற்குட்பட்ட அணிகளுக்கிடையில் நாளை ICC அக்கடமி 2, டுபாய் மைதானத்தில் 19 வயதிற்குட்பட்ட ஆசிய கிண்ணத்தின் 12 போட்டியாகநடைபெறவுள்ளது.