இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் திரைப்படம் விடாமுயற்சி. த்ரிஷா நாயகியாக நடிக்கும் இப்படத்தில் நடிகர் அர்ஜுன், Bigg Boss புகழ் ஆரவ், நடிகை ரெஜினா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பிற்காக நடிகர் அஜித் அண்மையில் அசர்பைஜானுக்கு சென்றிருந்தார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
தற்போது இப்படத்தின் கதை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்தவகையில் அஜித்தின் மனைவியாக த்ரிஷா நடிக்கிறார். இவர்கள் இருவரும் ஒரு சுற்றுலா செல்கின்றனர். த்ரிஷா அந்த இடத்தில் காணாமல் போய்விடுகிறார். ஒரு வில்லன் கும்பலிடம் மாட்டிக்கொள்கிறார் த்ரிஷா.
த்ரிஷாவை அஜித் காப்பாற்ற போராடுவதே மீதிக்கதையாகும். இந்தக் கதை ஒரு வெளிநாட்டு திரைப்படத்தின் மீள் உருவாக்கம் எனவும் தகவல்கள் கசிந்துள்ளது.