இந்தியாவில் இருந்து முட்டை இறக்குமதி மீண்டும் ஆரம்பிக்கப்படும் என வர்த்தக, வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளீன் பெர்னாண்டோ இன்று (13.12) தெரிவித்துள்ளார்.
முட்டை உற்பத்தியாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னரே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
முட்டை விலையை குறைக்குமாறு விடுக்கப்பட்ட அமைச்சரின் கோரிக்கையை உற்பத்தியாளர்கள் நிராகரித்துள்ளதாகவும், அதற்கேற்ப முட்டை இறக்குமதியை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
முட்டை ஒன்றின் விலையை 55 ரூபாய்க்கு கீழ் குறைக்க முடியாது என முட்டை வியாபாரிகள் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.