இந்தியா, தென்னாபிரிக்கா தொடர் சமநிலையில் நிறைவு

இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையில் நேற்று (14.12) மூன்றாவதும் இறுதியுமான T20 போட்டி ஜொஹனஸ்பேர்க்கில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா அணி 106 ஓட்டங்களினால் வெற்றி பெற்று தொடரை 1-1 என சமநிலை செய்துள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்கா அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

முதலில் துடுப்பாடிய இந்தியா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 201 ஓட்டங்களை பெற்றது. இதில்
சூர்யகுமார் யாதவ் 100(56) ஓட்டங்களையும், யஷஷ்வி ஜெய்ஸ்வால் 60(41) ஓட்டங்களையும் பெற்றனர். சூர்யகுமார் யாதவ் அவரது நான்காவது சதத்தை பூர்த்தி செய்ததுடன் ரோஹித் ஷர்மா, கிளென் மக்ஸ்வெல் ஆகியோரின் சாதனையை சமன் செய்துள்ளார். பந்துவீச்சில் கேஷவ் மஹராஜ், லிசாட் வில்லியம்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் நன்றே பர்கர், டப்ரைஸ் ஷம்சி ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.

பதிலுக்கு துடுப்பாடிய தென்னாபிரிக்கா அணி 13.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் 95 ஓட்டங்களை பெற்றது. டேவிட் மில்லர் 35(25) ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்களையும், ரவீந்திர ஜடேஜா 2 விக்கெட்களையும், முகேஷ் குமார், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.

இந்த போட்டியின் நாயகனாக சூர்யகுமார் யாதவ் தெரிவு செய்யப்பட்டார்.

Social Share

Leave a Reply