அத்தியாவசிய பொருட்களின் விலைகளில் மாற்றம்!

பண்டிகை காலத்தை முன்னிட்டு 10 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதொச நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இன்று (15.12) முதல் இம்மாதம் 31 ஆம் திகதி வரை இந்த விலை குறைப்பு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சதொச பால் மாவின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 940 ரூபாவாகும். இறக்குமதி செய்யப்பட்ட 425 கிராம் டின்மீனின் விலை 55 ரூபாவினாலும் 155 கிராம் டின்மீனின் விலை 10 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.

425 கிராம் உள்நாட்டு டின்மீனின் விலை 20 ரூபாவினாலும், ஒரு கிலோ உள்ளூர் உருளைக்கிழங்கின் விலை 15 ரூபாவினாலும், சிவப்பு நாடு மற்றும் வெள்ளை நாடு அரிசியின் விலை முறையே 15 ரூபா மற்றும் 5 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளதாகதாகவும், ஒரு கிலோ கொண்டைக்கடலையின் விலை 5 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply