ஐஸ் போதைப்பொருள் கடத்தியதாக சந்தேகிக்கப்படும் பெண் ஒருவரை பேலியகொட குற்றப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
பாலத்துறை பகுதியில் உள்ள ‘மெத்சந்த செவன’ என்ற அடுக்குமாடி குடியிருப்பில் இருந்தே குறித்த சந்தேகநபர் இந்த கடத்தலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்படும்போது சந்தேகநபர் சுமார் 15 இலட்சம் பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிம்புலா எல குணாவின் சகோதரர் ஷிவா தலைமையில் இயங்கும் 56 வயதுடைய காந்தி என்ற பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பெண் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.