ஹாலிஎல நகரில் இன்று (15.12) பிற்பகல் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
ஹாலியால நகரின் மத்தியில் அமைந்துள்ள மண்மேடு ஒன்று சரிந்து விழுந்துள்ளதாக அப்பகுதி மக்கள் டெஹ்ரிவித்துள்ளனர்.
மண் மேடு சரிந்து விழுந்ததில், அதன் அருகில் இருந்த இரண்டு சிறிய கடைகள் முற்றாக இடிந்து விழுந்துள்ளதுடன், அந்த கடைகளில் இருந்த வியாபாரிகள் அதிர்ஷ்டவசமாக தப்பித்துள்ளனர்.
இரண்டு பெரிய கற்கள் உருண்டு வீதிக்கு வந்து விழுந்துள்ளதால், அப்பகுதியில் போக்குவரத்து தடைபட்டுள்ளது.
மண்சரிவு அபாயம் உள்ள இடத்திலிருந்த இருந்த ஐந்து கடைகள் அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹலிலெல பொலிஸார் அப்பகுதியின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.