கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 1.6% அதிகரித்துள்ளது.
2022 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் நாட்டின் மொத்த தேசிய உற்பத்தி 2,900 பில்லியன் ரூபாவாக காணப்பட்டது.
2023 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் நாட்டின் மொத்த தேசிய உற்பத்தி 2,946 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இலங்கையின் விவசாயத்துறை 3 வீதத்தாலும், கைத்தொழில் உற்பத்தித்துறை 0.3 வீதத்தாலும், சேவைத்துறை 1.3 வீதத்தாலும் வளர்ச்சியடைந்துள்ளதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.