ஜனாதிபதி தேர்தல் அடுத்த வருடம்..!

அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் நடாத்தப்படும் என நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பிற்கமைய ஜனாதிபதி தேர்தல் நடாத்துவது அவசியம் என தெரிவித்த அமைச்சர் அதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் பொதுத் தேர்தல் தொடர்பில் இதுவரை எவ்வித கலந்துரையாடல்களும் இடம்பெறவில்லையென நீதியமைச்சர் விஜேதாசராஜபக்ஸ மேலும் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply