இன்றைய வானிலை..!

நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

வடக்கு, வடமத்திய, மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களில்; இவ்வாறு மழை வீழ்ச்சி பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களின் சில இடங்களில் 75 மில்லமீற்றரிலும் அதிகரித்த மழைவீழ்ச்சி பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் காணப்படுகின்ற கீழ் வளிமண்டலத் தளம்பல்நிலை காரணமாக, மழை வீழ்ச்சி மேலும் அதிகரிக்க கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இடியுடன் கூடிய மழை, பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கம் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Social Share

Leave a Reply