நாடளாவிய ரீதியில், வனவிலங்கு அதிகாரிகள்; இன்று அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.
அகில இலங்கை வனவிலங்கு அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் பிரபாஷ் கருணாதிலக்க இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
வனவிலங்கு அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்தல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.