இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் இன்று முதல் சந்தைக்கு..!

இறக்குமதி செய்யப்பட 10 மில்லியன் முட்டைகளை இன்று முதல் சந்தையில் விநியோகிப்படவுள்ளன.

கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் அனுமதியுடன் குறித்த முட்டைகள் சதொச நிறுவனத்திற்கு விநியோகிக்கப்பட உள்ளதாக இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, சதொச நிறுவனங்கள் ஊடாக பொது மக்கள் பண்டிகைக் காலங்களில் முட்டைகளை கொள்வனவு செய்ய முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, மேலும் 15 மில்லியன் முட்டைகள் இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளதுடன், குறித்த முட்டைகளை பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உரிய பரிசோதனைகளின் பின்னர் சதொச நிறுவனங்கள் மற்றும் தெரிவுசெய்யப்பட்ட சில பல்பொருள் அங்காடிகளுக்கு முட்டைகள் விநியோகிக்கப்படவுள்ளன.

கடந்த காலங்களில் உற்பத்தியாளர்களல் முட்டை விலையினை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதையடுத்து நுகர்வோரை கருத்திற்கொண்டு இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கத்தினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதனிடையே, முட்டை இறக்குமதியை நிறுத்துவதாக அரசாங்கம் அறிவித்ததையடுத்து, உள்நாட்டு முட்டை ஒன்றின் விலை மீண்டும் 55 முதல் 65 ரூபா வரை அதிகரித்துள்ளது.

இந்நிலையில், மீண்டும் முட்டையை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானம் மேற்கொணடுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Social Share

Leave a Reply