மன்னார் மாவட்ட புதிய அரச அதிபராக கனகேஸ்வரன் கடமையேற்பு.

மன்னார் மாவட்டத்தின் புதிய அரச அதிபராக க. கனகேஸ்வரன் கடமையைப் பொறுப்பேற்றுள்ளார்.

வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளராகக் கடமையாற்றி வந்த நிலையில் இன்றைய தினம், அரசாங்க அதிபராகப் பதவியேற்றுள்ளார்

நேற்றுமுன் தினம் பொது நிர்வாகம்,உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோகவிடமிருந்து நியமன கடிதத்தை பெற்றுக் கொண்ட அவர் இன்றைய தினம் மன்னார் மாவட்ட செயலகத்தில் காலை 9 மணியளவில் உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றார்.

அதனை தொடர்ந்து புதிய அரச அதிபரை வரவேற்கும் நிகழ்வு மாவட்ட செயலக மண்டபத்தில் இடம் பெற்றது.

குறித்த நிகழ்வில் மாவட்டத்தின் முன்னாள் அரசாங்க அதிபர் திருமதி.ஸ்ரான்லி டிமெல், மன்னார் மாவட்ட உதவி அரசாங்க அதிபர் மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர், உட்பட திணைக்கள தலைவர்கள்,மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள்,மதத்தலைவர்களெனப் பலரும் கலந்து கொண்டு ஆசிகளை வழங்கினர்.

நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த புதிய அரசாங்க அதிபர் மன்னார் மாவட்டத்தில் தீர்க்கப்படாமல் காணப்படும் காணிவிடுவிப்பு,சட்டவிரோத மணல் அகழ்வு,சுற்றுசூழல் பிரச்சினை,கழிவகற்றல் ,வனஜீவரசிகள் திணைக்களம் மற்றும் வனவள திணைக்களத்தின் கீழ் காணப்படும் காணிகளை விடுவிக்கும் விடயங்களை முன்னிலைப்படுத்திச் செயற்படப் போவதாகவும் இதேவேளை, மாவட்ட அபிவிருத்தி விடயங்களை துரிதப்படுத்தி மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதாகவும் தெரிவித்தார்.

Social Share

Leave a Reply