பிரபல நகைச்சுவை நடிகர் போண்டா மணி தனது 60 வயதில் காலமானார்.
அவர் நேற்றிரவு வீட்டில் திடீரென மயங்கி வீழ்ந்த நிலையில் குரோம்பேட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதன்போது இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
1991ஆம் ஆண்டு வெளியான ‘பவுனு பவுனுதான்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் போண்டா மணி.
இவர் வின்னர், வேலாயுதம், ஜில்லா, வசீகரா உள்ளிட்ட 250க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
நடிகர் போண்டா மணியின் மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.