RTI வரலாறு
இலங்கையில் தகவலுக்கான சுதந்திரம் பற்றிய சட்டமொன்றைக் கொண்டுவருதல் தொடர்பான வரலாற்றுப் பின்னணி
இலங்கை சார்க் வலயத்தில் தகவலுக்கான உரிமை பற்றிய சட்டமொன்றைக் கொண்டிராத ஒரே நாடாக இருப்பினும், இலங்கையில் இவ்வாறான சட்டமொன்றைக் கொண்டுவர வேண்டியதன் தேவைப்பாடு பற்றிய உரையாடல்கள் 1994 ஆம் ஆண்டு வரை நீண்டு செல்வதைக் காணலாம். குறிப்பாக 1994 பொதுத் தேர்தலில் பொதுஜன ஐக்கிய முன்னணியை ஆதரி்த்த ஊடக அமைப்புக்களும் சிவில் அமைப்புக்களும் தேர்தல் களத்தில் அதுபற்றிப் பேசியிருந்தன. 1994 ஆம் ஆண்டில் தகவல், சுற்றுலாத்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் தர்மசிறி சேனாநாயக்கவினால் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்பட்ட அரசாங்கத்தின் ஊடாகக் கொள்கை என்னும் விஞ்ஞாபனம் இது பற்றிய எழுத்திலான முதலாவது ஆவணமாகும். ஆகவே, இலங்கையில் 1994 இல் ஆரம்பமான தகவலுக்கான உரிமை பற்றிய சட்டம் தொடர்பான கலந்துரையாடல்களின் தொடர்ச்சியை இக்குறிப்பு தாங்கி வருகின்றது.
தகவலுக்கான உரிமை பற்றிய அரசியலமைப்பு ரீதியான ஏற்பாடுகள்
2015 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்புக்கான 19 வது திருத்தத்தின் மூலம் 1978 அரசியலமைப்பில் இருப்பினும், ஶ்ரீவெளியிடுதலுட்பட்ட பேச்சுச் சுதந்திரமும் கருத்துத் தெரிவித்தற் சுதந்திரமும் அடிப்படை உரிமையாக அத்தாட்சிப்படுத்தப்பட்டிருந்தது. தகவலுக்கான உரிமையை அடிப்படை உரிமையாக அரசியலமைப்பில் உள்வாங்க வேண்டுமென 1994 ஆம் ஆண்டில் முதல் முறையாக கொள்கை ரீதியான தீர்மானம் எடுக்கப்பட்டது. 1994 ஒக்ரோபர் 10 ஆம் திகதி தகவல், சுற்றுலாத்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் தர்மசிறி சேனாநாயக்கவினால் அமைச்சரவை நிருபம் ஒன்றின் மூலம் பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் ஊடாகக் கொள்கை பற்றிய அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதில் இரண்டாவது வி்டயமாக தகவலுக்கான உரிமையை பரந்தளவில் அங்கீகரிப்பதாகவும் அதற்கென அரசியலமைப்பு ரீதியான அந்தஸ்தினை வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர் வெகுசன ஊடக அமைச்சினால் ஊடக சுதந்திரத்திலும் வெளியிடுதலுக்குட்பட்ட பேச்சு சுதந்திரத்திலும் வெளியிடுதலுக்குட்பட்ட பேச்சுச் சுதந்திரத்திலும் தாக்கம் செலுத்துகின்ற சட்டங்ளை மறுசீரமைப்பதற்கான ஆலோசனைகளை வழங்குமுகமாக நியமிக்கப்பட்ட ஆலோசனைக்குழு ஆர். கே. டப்ளியூ. குணசேகர குழு 1996 மே 27 ஆம் திகதி தனது பரிந்துரைகளைச் சமர்ப்பித்தது. நடைமுறையிலுள்ள அரசியலமைப்பில் சிவில், அரசியல் உரிமைகள் பற்றிய சர்வதேச உடன்படிக்கையில் சொல்லப்பட்டுள்ளவாறு கருத்து தெரிவித்தற் சுதந்திரத்தில் தகவலுக்கான உரிமையும் உள்ளடக்கப்படுதல் வேண்டும்” பரிந்துரை இல. 03.
எவ்வாறாயினும், அதற்கான அரசியலமைப்புத் திருத்தம் கொண்டுவரப்படாத ஒரு சூழ்நிலைமையில் வெளியிடுதலுட்பட்ட பேச்சு சுதந்திரத்தில் தகவலுக்கான உரிமையும் அடங்குவதாக விமல் பெர்னாந்து எதிர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனமும் ஏனையோரும் [S.C. APPLICATION No. 81/95] வழக்கில் சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் எதிர் நகர அபிவிருத்தி அதிகாரசபையும் ஏனையோரும் எனப்படும் (SCFR 47/2004) வழக்கிலும் உயர் நீதிமன்றம் மீண்டும் இந்த நிலையை உறுதிப்படுத்தியுள்ளது.
1998 ஏப்பிரல் மாதம் 27 தொடக்கம் 29 திகதி வரை பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற ஊடகச் சுதந்திரமும் சமூகத்தின் பொறுப்பும் தொடர்பான ஊடகவியலாளர் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட ஊடகச் சுதந்திரமும் சமூகத்தின் பொறுப்பும் தொடர்பான கொழும்புப் பிரகடனம்” மூலமும் அரசியலமைப்பில் தகவலுக்கான உரிமை பற்றிய ஏற்பாடுகள் இடம்பெறாமை வலியுறுத்தப்பட்டுள்ளதுடன் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கை (ICCPR) யின் 19வது பிரிவுக்கமைய அரசியலமைப்பு மீதான திருத்தம் கொண்டுவரப்பட வேண்டுமெனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இனப்பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வொன்றைக் கொண்டுவரும் நோக்கத்துடனான அரசியல் யாப்பினை மறுசீரமைக்கும் பணிகள் அக்காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டிருந்ததோடு, தீர்வுப்பொதி” என்ற பெயரில் பிரசித்தமான அரசியல் யோசனைகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட 2000 ஆண்டின் அரசியலமைப்பு வரைவில் அடிப்படை உரிமைகளின் கீழ் தகவலுக்கான உரிமை உள்ளடக்கப்பட்டிருந்தது. இந்த வரைவு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டபோதும் எதிர்க்கட்சி கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்த காரணத்தினால் அது விவாதிக்கப்படாமலேயே கைவிடப்பட்டுள்ளது.
ஆர். கே. டப்ளியு. குணசேகர குழுவின் அறிக்கை – 1995
1995 ஆண்டில் ஊடக சுதந்திரம் மற்றும் பேச்சுச் சுதந்திரம் தொடர்பில் தாக்கம் செலுத்தும் சட்டங்களை மறுசிரமைப்பதற்கான ஆலோசனைகளை வழங்குமுகமாக ஊடக, சுற்றுலாத்துறை அமைச்சரினால் நியமிக்கப்பட்ட ஆலோசனைக் குழுவின் தலைவர் சட்டத்தரணி திரு. ஆர். கே. டப்ளியு. குணசேகர உட்பட்ட குழு தகவலுக்காக உரிமை பற்றிய சட்டமொன்றைக் கொண்டுவருவது உசிதமானதென யோசனை தெரிவித்தது. (பரிந்துரை இல. 26) பின்வருவோர் இக்குழுவின் ஏனைய அங்கத்தவர்களாவர். கலாநிதி க்ஷிராணி பண்டாரநாயக்க, றொஹான் எதிரிசிங்ஹ, விக்ரர் குணவர்தன, லூக்ஷன் ராஜகருணாநாயக்க, கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்ன, சூரியா விக்கிரமசிங்க. இச்சட்டமானது வெளிப்படையான அரசியலமைப்பு கோட்பாடுகளையும் கீழ்காணும் கோட்பாடுகளையும் அடிப்படையாகக் கொண்டிருத்தல் வேண்டுமென இக்குழுவின் பரிந்துரைகளில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
- விதிவிலக்கு என்பதை விடவும் வெளிப்படுத்தல் சட்ட விதியாக அமைதல் வேண்டும்.
- தகவல்களை அணுகுவதற்கு சகலருக்கும் சமத்துவமான உரிமைகள் இருத்தல் வேண்டும்.
- தகவல்களைக் கோரும் ஒருவர் அதனை வெளிப்படுத்துவதற்கான நியாயத்தை நிரூபிக்க வேண்டிய தேவை இருத்தல் கூடாது என்பதுடன் ஏதேனும் ஒரு தகவல் வழங்கப்படாததன் நியாயத்தை நிரூபிக்கும் பொறுப்பு அரசாங்கத்தைச் சாரும்.
- தவறான விதத்தில் தகவல்கள் வழங்கப்படுவதை நிராகரிப்பதற்கு எதிராக நீதிமன்றத்தில் நிவாரணத் பெறும் வாய்ப்பு.
இந்தக் கோட்பாடுகளுக்கு மேலதிகமாக தகவலுக்கான உரிமை தொடர்பான சட்டத்தில் அடங்க வேண்டிய பல்வேறு விடயங்களை இப்பரிந்துரை கொண்டிருந்தது.
இலங்கை சட்ட ஆணைக்குழுவின் வரைவு – 1996
இலங்கை சட்ட ஆணைக்குழு 1996 இல் தகவல்களை அணுகுவது பற்றிய சட்ட வரைவு ஒன்றைச் சமர்ப்பித்தது. இந்த சட்டவரைவுடன் சமர்ப்பிக்கப்பட்டிருந்த அறிக்கை மூலம் சட்டத்துறையில் அப்போது காணப்பட்ட மோசமான நிலையை ஆணைக்குழு ஏற்றுக்கொண்டுள்ளது.
அமைச்சரவை அங்கீகரித்த வரைவு – 2004
2002 மற்றும் 2003 ஆம் ஆண்டில் பத்திரிக்கை ஆசிரியர் பேரவை, சுதந்திர ஊடக இயக்கம் மற்றும் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் ஆகியன இணைந்து தகவலுக்கான உரிமை பற்றிய சட்ட வரைவு ஒன்றினை சமர்ப்பித்திருந்தன. அப்போதைய பிரதம அமைச்சருடனான சில சுற்றுக் கலந்துரையாடல்களின் பின்னர் பல்வேறு திருத்தங்களுடன் 2003 ஆண்டில் நிதி அமைச்சினால் தயாரிக்கப்பட்ட இறுதி வரைவுக்கு 2004 பெப்ருவரி மாதம் அமைச்சரவையின் அங்கிகாரம் கிடைத்தது. அதையொட்டிய காலப்பகுதியில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதால் சட்ட வரைவு தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் முனைமழுங்கியது.
சட்ட ஆணைக்குழுவின் உத்தேச தகவலுக்கான உரிமை பற்றிய சட்ட வரைவு – 2006
இலங்கை சட்ட ஆணைக்குழு 2006 ஆண்டு ஏப்பிரல் மாதம் தகவலுக்கான உரிமை பற்றிய உத்தேச சட்ட வரைவொன்றை இரண்டாவது முறையாகவும் சமர்ப்பித்தது. குறித்த சட்ட வரைவுடன் சமர்ப்பிக்கப்பட்டிருந்த அறிக்கையில் சனநாயக நீரோட்டத்தின்பாலான மக்களின் பங்கேற்பினை பூரணப்படுத்துவதாயின் தகவலுக்கான உரிமையை சட்ட ரீதியாக அங்கீகரிக்க வேண்டுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இலங்கை 2003 ஆண்டில் ஐக்கிய நாடுகளின் இரண்டு உடன்படிக்கைகளில் அதாவது ஒருங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களை ஒழிப்பதற்கான உடன்படிக்கை மற்றும் ஊழல் எதிர்ப்பு உடன்படிக்கையிலும் கைச்சாத்திட்டுள்ள காரணத்தினால் நல்லாட்சி வளர்ச்சிக்கு இவ்வாறான சட்டமொன்றின் தேவைப்பாடு பற்றி சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. அத்துடன், உயர்நீதிமன்றத்தின் அண்மைக்கால தீர்ப்புகளில் கருத்துத் தெரிவித்தற் சுதந்திரத்தின் மூலம் அரசியலமைப்பின் தகவலுக்கான உரிமை உள்ளடக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தாலும் அதற்கான சட்ட அங்கிகாரம் தேவையென தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்ட ஆணைக்குழுவினால் 2001 ஆண்டில் தகவலுக்கான உரிமை தொடர்பான சட்டமொன்றைக் கொண்டு வருவதற்கான யோசனையொன்று நிதி அமைச்சுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்தாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்ட வரைவானது நீதி அமைச்சினால் 2003 ஆண்டு தயாரிக்கப்பட்ட சட்ட மூலத்தின் திருத்தப்பெற்ற பதிப்பாக அமைவதோடு, அது சர்வதேவத்தின் சமீபகால மாற்றங்களையும் கருத்திற்கொண்டு மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிலிந்த மொறகொடவினால் சமர்ப்பிக்கப்பட்ட சட்ட வரைவு – 2009
நீதி, சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் மிலிந்த மொறகொடவினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு இலங்கை பத்திரிக்கை நிறுவனம் மற்றும் பத்திரிக்கை ஆசிரியர் பேரவையினதும் கருத்துக்களைப்
பெற்றுக்கொண்டு 2009ம் ஆண்டு நவம்பர் மாதம் தகவல்களுக்கான அணுக்கம் பற்றிய சட்டமூலம் ஒன்றை தயாரித்தது. 2004ம் ஆண்டு கிடைக்கப்பெற்ற அமைச்சரவையின் அங்கீகாரத்தை அடிப்படையாகக்கொண்டு இச்சட்டமூலம் மேலும் விருத்தி செய்யப்பட்டது. இதற்கென 2005ம் ஆண்டு இந்தியாவில் நிறைவேற்றப்பட்ட தகவல்களுக்கான உரிமைச்சட்டமும் முன்மாதிரியாக எடுத்தாளப்பட்டுள்ளது. இவை தவிர, சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் பலரின் ஒத்துழைப்பும் பெறப்பட்டுள்ளது. 2010 பொதுத்தேர்தல் நடைபெறவிருந்த நிலையில் இச்சட்டமூலம் அப்போதைய நீதி அமைச்சரினால் ஜனாதிபதி அவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டது. 2010 பொதுத்தேர்தலில் மிலிந்த மொறகொட தோல்வியடைந்தததை அடுத்துச் சட்டங்களை நோக்கி நகர்வதற்கு எவரும் முன்வரவில்லை .
திரு விஜேயதாச ராஜபக்ஷ முன்வைத்த தகவலுக்கான உரிமை தொடர்பான சட்ட வரைபு – 2010
2010ம் ஆண்டு எதிர்க்கட்சி உறுப்பினராக இருந்த திரு விஜயதாச ராஜபக்ஷ தகவல்களுக்கான உரிமை தொடர்பான சட்டவரைபொன்றை தயாரித்துள்ளதாக தகவல்கள் உள்ளபோதும் அதுபற்றி மேலதிக தகவல்கள் கிடைக்கவில்லை.
திரு கரு ஜனசூரியவினால் சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலம் – 2010
2010ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23ம் திகதி எதிர்க்கட்சி உறுப்பினரும் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான திரு கரு ஜயசூரிய அவர்கள் தகவலுக்கான உரிமைதொடர்பான சட்டமூலம் ஒன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அதனை நிறைNவுற்றவேண்டும் என முன்மொழிந்தார். எதிர்க்கட்சித்தலைவர் திரு ரணில் விக்கிரமசிங்க அந்த பிரேரணையை வழிமொழிந்தார். இருப்பினும் அரசாங்கக் கட்சி இவ்வாறான சட்டமூலமொன்றைக் கொண்டுவரவிருப்பதால் திரு கரு. ஜயசூரிய அவர்கள் சமர்ப்பித்த சட்டமூலத்தை நீக்கிக்கொள்ள வேண்டுமென கடுமையாக வலியுறுத்தப்பட்டது. பிரஸ்தாப சட்டமூலம் தயார் நிலையில் உள்ளதாகவும் , இது கொள்கை ரீதியான ஒரு விடயமென்பதால் அரசாங்கக் கட்சியே அதனை பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்க வேண்டுமெனவும் எனவே , குறித்த சட்டமூலத்தை நீக்கிக்கொள்ள வேண்டுமெனவும் அரசாங்கத்தின் முதற்கோலாசான் திரு. தினேஸ் குணவர்த்ன உட்பட சில உறுப்பினர்கள் தெரிவித்தனர். அரசாங்கக் கட்சி அவ்வாறான சட்டமூலமொன்றைக் கொண்டு வருவதாக வாக்குறுதியளித்ததன் பேரில் திரு .கரு ஜய சூரிய தனது பிரேரணையை வாபஸ் பெற்றார்.
திரு கரு ஜனசூரியவினால் சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலம் – 2010
2010ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23ம் திகதி எதிர்க்கட்சி உறுப்பினரும் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான திரு கரு ஜயசூரிய அவர்கள் தகவலுக்கான உரிமைதொடர்பான சட்டமூலம் ஒன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அதனை நிறைNவுற்றவேண்டும் என முன்மொழிந்தார். எதிர்க்கட்சித்தலைவர் திரு ரணில் விக்கிரமசிங்க அந்த பிரேரணையை வழிமொழிந்தார். இருப்பினும் அரசாங்கக் கட்சி இவ்வாறான சட்டமூலமொன்றைக் கொண்டுவரவிருப்பதால் திரு கரு. ஜயசூரிய அவர்கள் சமர்ப்பித்த சட்டமூலத்தை நீக்கிக்கொள்ள வேண்டுமென கடுமையாக வலியுறுத்தப்பட்டது. பிரஸ்தாப சட்டமூலம் தயார் நிலையில் உள்ளதாகவும் , இது கொள்கை ரீதியான ஒரு விடயமென்பதால் அரசாங்கக் கட்சியே அதனை பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்க வேண்டுமெனவும் எனவே , குறித்த சட்டமூலத்தை நீக்கிக்கொள்ள வேண்டுமெனவும் அரசாங்கத்தின் முதற்கோலாசான் திரு. தினேஸ் குணவர்த்ன உட்பட சில உறுப்பினர்கள் தெரிவித்தனர். அரசாங்கக் கட்சி அவ்வாறான சட்டமூலமொன்றைக் கொண்டு வருவதாக வாக்குறுதியளித்ததன் பேரில் திரு .கரு ஜய சூரிய தனது பிரேரணையை வாபஸ் பெற்றார்.
எதிர்கட்சி பொது வேட்பாளரின் தேர்தல் அறிக்கை சனாதிபதித் தேர்தல் – 2015
2015இல் நடைபெற்ற சனாதிபதித் தேர்தலையொட்டி எதிர்கட்சியின் பொது வேட்பாளரான மைத்திரிபால சிறிசேன அவர்களின் கொள்கைப் பிரகடனத்துடன் விநியோகிக்கப்பட்ட ‘மாற்றத்திற்காக ஒன்றுபடுவோம். மைத்திரி ஆட்சியில் 100 நாட்களுக்குள் புதியதோர் நாடு” எனும் தேர்தல் அறிக்கையில், தகவலுக்கான உரிமை தொடர்பான சட்டமொன்றைக் கொண்டுவருதல் முதன்மையான வாக்குறுதியாகக் காணப்பட்டது. அதன்படி 2015 பெப்ருவரி 20ம் திகதி குறி;த்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து மார்ச்சு 20ம் திகதி அது நிறைவேற்றப்பட்டது.
அதற்கமைய 2015 மார்ச்ச 12ம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பாராளுமன்ற மறுசீரமைப்பு, வெகுசன ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக அவர்களினால் தகவலுக்கான உரிமை தொடர்பான சட்டமொன்றைக் கொண்டு வருவதற்கான அமைச்சரவைப் பத்திரமொன்று சமர்ப்பிக்கப்பட்டது. அதன்படி பாராளுமன்ற மறுசீரமைப்பு, வெகுசன ஊடக அமைச்சு, நீதி அமைச்சு மற்றும் பொதுநிருவாக அமைச்சிடம் சட்டமூலத்தைத் தயாரிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அதேநேரம், ஊடகவியலாளர்கள், சட்டத்துறையில் தேர்ச்சி பெற்றவர்கள், அரச சார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் ஆகியோரின் கருத்துக்களும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டுமெனத் தீர்மானிக்கப்பட்டது. எனவே, வெகுசன ஊடக அமைச்சின் வழிகாட்டலின் கீழ் வெகுசன ஊடக, சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் குழு ஒன்றின் மூலம் சட்டவரைவு தயாரிக்கப்பட்டது.
தகவலுக்கான அணுக்கம் பற்றிய சட்ட வரைவு – 2015
பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் 2015 ஏப்பிரல் 22ம் திகதி அமைச்சரவைப் பத்திரமொன்றைச் சமர்ப்பித்து இதனை அவசர சட்ட மூலமாகக் கொண்டுவர வேண்டுமென யோசனை முன்வைத்தார். அத்தோடு குறித்த சட்டத்தின் அடிப்படைப் பண்புகள் தொடர்பில் அமைச்சரவையில் ஓர் உடன்பாடும் எட்டப்பட்டது.
ஆயினும், அரசியலமைப்புக்கான 19வது திருத்தத்தின் மூலம் அவசர சட்டமூலங்களைக் கொண்டுவரும் ஏற்பாடுகள் நீக்கப்பட்டன. 2015 ஏப்பிரல் 29ம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பிரேரணையொன்றைக் கொண்டு வந்த பிரதம அமைச்சர் அமைச்சரவை அங்கீகரித்த சட்டமூலத்திற்கு பல்வேறு நிறுவனங்களும் நபர்களும் திருத்தங்களை முன்வைத்திருந்த காரணத்தினால் அவற்றையும் கவனத்தில் கொண்டு திருத்தப்பெற்ற சட்டமூலத்தினை சமர்ப்பித்ததோடு அதற்கு அமைச்சரவையின் அங்கீகாரமும் கிடைத்தது. மேலும், இச்சட்ட மூலத்தினை அவசர சட்டமூலமாக அன்றி பொதுவான சட்டமூலமாக பாராளுமன்றத்தில் கொண்டு வருவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
2015 நவம்பர் 02ம் திகதி இறுதியாக திருத்தப்பெற்ற சட்டமூலம் பாராளுமன்ற மறுசீரமைப்பு, வெகுசன ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக அவர்களினால் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்பட்டதோடு, அமைச்சரவையின் அங்கீகாரமும் கிடைக்கப்பெற்றது. அங்கீகாரம் கிடைத்த சட்டமூலம் 2015 திசெம்பர் 18ம் திகதி வர்த்தமானிப் பத்திரிகையில் வெளியிடப்பட்டது. பின்னர் அரசாங்கம் குறித்த சட்டமூலத்தை மர்ச்சு 8ம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதாக பிரசாரம் செய்த போதும் அத்தேதியில் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை.
அத்தேதியன்று பாராளுமன்றதில் உரையாற்றிய பாராளுமன்ற மறுசீரமைப்பு, வெகுசன ஊடக அமைச்சர் வடமாகாண சபையின் அங்கீகாரம் அதுவரையிலும் கிடைக்கவில்லையென்றும் அங்கீகாரம் கிடைத்தவுடன் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதாகவும் தெரிவித்தார்.
2016 மார்ச்சு 24ம் திகதி தகவலுக்கான உரிமை பற்றிய சட்டமூலம் பாராளுமன்ற மறுசீரமைப்பு, வெகுசன ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக அவர்களால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த சட்டமூலம் அரசியலமைப்புடன் முரண்படுவதாகத் தெரிவித்து உயர்நீதிமன்றத்தில் 05 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. மனுதாரர்களான சட்டத்தரணிகள் சங்கம் உட்பட்ட நிறுவனங்களும் 05 நபர்களும் இச்சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணானதெனத் தெரிவித்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை 2015 ஏப்பிரல் 05 மற்றும் 06 ஆகிய இரண்டு நாட்களில் பிரதம நீதியரசர் மற்றும் உயர் நீதிமன்றத்தின் மேலும் நீதியரசர்களின் முன்னிலையில் நடைபெற்றது.