எதிர்வரும் 5 வருடங்களுக்கு அவுஸ்திரேலியாவில் 740 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலிடவுள்ளதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுவே உலக நாடுகளில் முதலிடும் மிகப்பெரிய தொகை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள ஆராய்ச்சி மையம் மற்றும் Cloud தொழிநுட்ப திறனை மேம்படுத்தும் திட்ட பணிகளுக்காக இந்த பாரியளவு நிதி முதலிடப்படவுள்ளதாக கூகுள் நிறுவன தலைமை அதிகாரி திரு.சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
இத்திட்டத்தினூடாக எதிர்காலத்தில் உள்நாட்டில் 6,000 தொழில் வாய்ப்புக்களை உருவாக்க முடியும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.