தேசிய முற்போக்கு திராவிட தலைமை கழகத்தில் உள்ள அமரர் கேப்டன் விஜயகாந்தின் நினைவிடத்திற்கு சென்று நேற்று (02.01) நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
அத்துடன், சாலி கிராமத்திலுள்ள அவரது வீட்டுக்கு சென்று, கழக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அம்மையாரை சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, ஊடகவியலாளர்களை சந்தித்த அமைச்சர் ஜீவன் தொண்டமான் கூறியதாவது, தேமுதிக கட்சித் தொண்டர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளதுடன், தலைவன் என்ற சொல்லுக்கு சிறந்த உதாரணம் கேப்டன் என தெரிவித்துள்ளார்.