இலங்கை, சிம்பாவே முதலாவது போட்டி மழையினால் கைவிடப்பட்டது

இலங்கை மற்றும் சிம்பாவே அணிகளுக்கிடையில் நேற்று (06.01) கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் முதலாவது ஒரு நாள் சர்வதேச போட்டியாக நடைபெற்றது. இந்த போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 273 ஓட்டங்களை பெற்றது. இதில் சரித் அசலங்க 101(95) ஓட்டங்களையும், குசல் மென்டிஸ் 46(48) ஓட்டங்களையும், சதீர சமரவிக்ரம 41(31) ஓட்டங்களையும் பெற்றனர். சரித அசலங்க அவரின் மூன்றாவது சதத்தை பூர்த்தி செய்து கொண்டார்.

பதிலுக்கு துடுப்பாடிய சிம்பாவே அணி 4 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 12 ஓட்டங்களை பெற்ற வேளையிலே மழை பெய்யத்தொடங்கியது. பந்துவீச்சில் டில்ஷான் மதுஷங்க 2 விக்கெட்களை கைப்பற்றினார்.

Social Share

Leave a Reply