சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 12 தமிழ் அரசியல் கைதிகளையும், எதிர்வரும் சுதந்திர தினத்திற்கு முன்னதாக விடுதலை செய்ய வேண்டும் என குரலற்றவர்களின் குரல் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி கையெழுத்துக்கள் அடங்கிய மனுவொன்று குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மு.கோமகனிளால் கையளிக்கப்பட்டுள்ளது.
மேலும், இனங்களுக்கிடையில் நீண்டகாலமாக நிலவும் அரசியல் முரண்பாடுகளை நிறைவுக்கு கொண்டு வருவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.