உணவு தேவைக்காக 7 லட்சம் குடும்பங்கள் கடனில்..!

நாட்டில் சுமார் 7 லட்சம் குடும்பங்கள் அன்றாட உணவு தேவைக்காக கடன் பெற்றுள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் கற்கைகள் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.

மக்கள் தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் அண்மைய ஆய்வு அறிக்கையில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உணவுக்காகக் கடன் பெற்ற குடும்பங்களின் எண்ணிக்கை 22.3 வீதமாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கட்டடங்களை நிர்மாணிப்பதற்கும் புனரமைப்பதற்கும் 53,200 குடும்பங்களும், வங்கிகளில் 97,000 குடும்பங்களும், கடன் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நிதி நிறுவனங்களில் 272,250 குடும்பங்களும், பண தரகர்களிடம் 303500 குடும்பங்களும் கடன் பெற்றுள்ளதாக பேராசிரியர் வசந்த அத்துகோரள மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Social Share

Leave a Reply