கிழக்கு மாகாண ஆளுநரும்,இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில் பொங்கல் விழா நிகழ்வில் மற்றுமொரு அம்சமாக கிண்ணியாவில் 55 படகுகளுடன் 110 போட்டியாளர்கள் பங்கேற்ற படகோட்ட போட்டியானது நேற்றுஇடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கைக்கான இந்திய உதவி உயர்ஸ்தானிகர் டாக்டர் வெங்கடேஸ்வரன் பங்கேற்றதுடன்,படகோட்ட போட்டியை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்,டாக்டர் வெங்கடேஸ்வரன் ஆகியோர் பச்சை கொடி அசைத்து ஆரம்பித்து வைத்தனர்.
இந்த போட்டியை பார்வையிடுவதற்காக ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாயர்கள் வருகை தந்தனர்.
இதன்போது போட்டியில் வெற்றிபெற்ற வெற்றியாளர்களுக்கு முதல் பரிசாக ஒரு லட்சம் ரூபாவும்,இரண்டாவது வெற்றியாளருக்கு 50 ஆயிரம் ரூபாவும், மூன்றாவது வெற்றியாளருக்கு 25 ஆயிரம் ரூபாவும் வழங்கப்பட்டது.