நோர்வேயில் பல் மருத்துவராக கடமையாற்றிய இலங்கைப் பெண் ஒருவர் தனது முன்னால் காதலனால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
தனது முன்னாள் காதலனால் துன்புறுத்தப்படுவதாக குறித்த பெண் நோர்வே பொலிஸாரிடம் பலமுறை முறைப்பாடு; செய்துள்ளார்.
எவ்வாறாயினும் நோர்வேயின் Elverum இல் குறித்த பெண்; கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண் ஒருவரே துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்கான நிலையில் உயிரிழந்துள்ளார்.