பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் பங்களாதேஷ் பொதுத் தேர்தல் நிறைவு..!

பங்களாதேஷ் பொதுத் தேர்தலில் 5ஆவது முறையாகவும் ஷேக் ஹசீனா வெற்றி பெற்றுள்ளார்.

எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசியவாத கட்சி நாடுதழுவிய போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது.

இந்த தேர்தலை புறக்கணிப்பதாக தேசியவாத கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான கலீதா ஜியா அறிவித்தார்.

மேலும், பொதுத்தேர்தல் நடைபெறும் சூழலில் தேர்தல் ஆணையத்தின் தேர்தல் செயலி செயலிழந்துள்ளதாக தகவல் வெளியானது.

எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்பு, தேர்தல் செயலி செயலிழப்பு மற்றும் பல வன்முறை சம்பவங்களுக்கு மத்தியிலும்; பலத்த பாதுகாப்புடன் இன்று தேர்தல் நடைபெற்றது.

எவ்வாறாயினும் 5ஆவது முறையாக ஷேக் ஹசீனா வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக பதவியேற்றுள்ளார்.

Social Share

Leave a Reply