15 வயது சிறுமியை கூட்டு வன்புணர்வு செய்த மூவர் கைது!

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் வசிக்கும் 15 வயதுடைய பாடசாலை மாணவியை கடத்திச் சென்று தாக்கி கூட்டு வன்புணர்வு செய்த மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 5ம் திகதி குறித்த சிறுமியை ஆரியம்பட்டி பகுதிக்கு அழைத்துச் சென்று அங்கு அவரை தாக்கி கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, குறித்த சந்தேகநபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஆரியம்பதி பகுதியைச் சேர்ந்த 26-32 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனதெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் இன்று (08.01) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

Social Share

Leave a Reply