ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவுக்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்ரிபால சிறிசேன மற்றும் பதில் பொதுச் செயலாளர் சாரதி துஷ்மந்த மித்ரபால ஆகியோர் தாக்கல் செய்திருந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, அந்த கட்சியின் பதில் பொதுச் செயலாளர் சாரதி துஷ்மந்த மித்ரபால, குறித்த பதவியினை தொடர்வதற்கு இடையூறு ஏற்படுவதை தடுக்கும் வகையில் தயாசிறி ஜயசேகரவுக்கு எதிராக எதிர்வரும் 22ஆம் திகதி வரை தடையுத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.