பங்களாதேஷ் பொதுத் தேர்தலில் 5வது முறையாகவும் வெற்றி பெற்ற பிரதமர் ஷேக் ஹசீனாவிற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பங்களாதேஷ் பிரதமரின் தொலைநோக்குப் பார்வையுடனான தலைமைத்துவத்தை ஜனாதிபதி பாராட்டியுள்ளார்.
அவரது அறிவும், அனுபவமும், பங்களாதேஷ் மக்களுக்கு பெரும் பயனளிக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.