மட்டக்களப்பிற்கான அஞ்சல் ரயில் சேவை ரத்து..!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்டுள்ள பலத்த மழை மற்றும் வெள்ளம் காரணமாக மட்டக்களப்பிற்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் செல்லும் இரவு நேர அஞ்சல் ரயிலும், இன்று இரவு 07.15க்கு மட்டக்களப்பில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் செல்லும் அஞ்சல் ரயிலும் ரயில்வே திணைக்களத்தினால் ரத்து செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Social Share

Leave a Reply