போதைப்பொருள் சுற்றிவளைப்பில் 897 பேர் கைது!

கடந்த 24 மணித்தியாலங்களில் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் கீழ் 897 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் 24 சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், போதைக்கு அடிமையான 22 பேர் புனர்வாழ்வு மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் விஷேட பணியகத்தின் பதிவு செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 37 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களிடமிருந்து 299 கிராம் ஹெரோயின், 172 கிராம் ஐஸ் மற்றும் ஒரு கிலோ 400 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

Social Share

Leave a Reply