” தைப்பிறந்தால் வழிபிறக்கும் என்பது இந்து மக்களின் உறுதியான நம்பிக்கை. எனவே, எமது நாட்டை சூழ்ந்துள்ள ‘பொருளாதார நெருக்கடி’ எனும் இருள் அகன்று, இலங்கை தேசம் முன்னேற்றம் அடையவும், அதன்மூலம் மக்கள் வாழ்வு மேம்படவும் வழி பிறக்கும் என உறுதியாக நம்புகின்றேன்.”
மலையகத்தில் மாற்றம் மலர்ந்து மக்களுக்கு வழி பிறக்கட்டும், இல்லங்கள் தோறும் இன்பங்கள் பெருகட்டும், தீமைகள் அகன்று நன்மைகள் செழிக்கட்டும்.
அனைவருக்கும் இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்
-ஜீவன் தொண்டமான்-