நாட்டின் அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பினை பலப்படுத்துவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக துறைமுகங்கள், கப்பற்துறை மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விமான நிலையத்தினூடாக முன்னெடுக்கப்படும் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கில் விமான நிலையப் பாதுகாப்புப் பணியாளர்களின் எண்ணிக்கையை 1,325 ஆக அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக துறைமுகங்கள், கப்பற்துறை மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.