பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கும் நாட்டை ஸ்திரப்படுத்துவதற்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு இன்னுமொரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு தற்போதைய ஜனாதிபதியே பொருத்தமானவர் என்பது தனது தனிப்பட்ட நம்பிக்கை எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தற்போது நாடு புதிய சோதனைகளை நடத்துவதற்கு ஏற்ற தருணத்தில் இல்லை எனவும், இவ்வாறான பரிசோதனைகளை மேற்கொள்வதன் மூலம் நாடு மேலும் பாதாளத்தில் விழும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.