ரஷ்யாவில் மனித உரிமை ஆர்வலர் ஒருவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டயைடுத்து மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்போது, போராட்டக்காரர்கள் கலகத் தடுப்பு பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இந்த மோதலில் பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்;தி வெளியிட்டுள்ளன.
மனித உரிமை ஆர்வலரான ஃபெயில் அல்சினோவுக்கு ஆதரவாக மக்கள் பாஷ்கார்டோஸ்தான், நீதிமன்றத்திற்கு வெளியே கூடியதையடுத்து கூட்டத்தைக் கலைப்பதற்காக அதிகாரிகள் கண்ணீர் புகைக் குண்டுகளைப் பயன்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதப்பிரச்சினைகளை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் ஃபெயில் அல்சினோவுக்கு நீதிமன்றம் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.