மேலும் 987 சந்தேகநபர்கள் கைது..!

யுக்திய நடவடிக்கையின் கீழ் கடந்த 24 மணித்தியாலங்களில் 987 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதில் போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 663 சந்தேக நபர்களும், குற்றப் பிரிவுக்கு அனுப்பப்பட்ட பட்டியலில் இருந்த 324 சந்தேக நபர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சோதனை நடவடிக்கையில் 270 கிராம் ஹெரோயின், 140 கிராம் ஐஸ், 18 கிலோ 358 கிராம் கஞ்சா போதைப்பொருள், 27,242 கஞ்சா செடிகள், 552 கிராம் மாவா, 175 கிராம் மதன மோதகம், 52 கிராம் தூள், 1,080 போதை மாத்திரைகள் போன்றன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

Social Share

Leave a Reply