கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டின் பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.
மாத்தறை – ஹக்மன வீதியின் யட்டியன பிரதேசத்தில் லொறி ஒன்று முச்சக்கர வண்டியுடன் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சௌசிறி உயன – யடிவன பகுதியை சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, மிரிஹான பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரண கெஸ்பேவ வீதியில் வீதியைக் கடக்க முயற்பட்ட பெண் ஒருவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது.
கங்கொடவில – நுகேகொட பகுதியைச் சேர்ந்த 85 வயதுடைய பெண் ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, கெபிதிகொல்லேவ – வவுனியா வீதியின் துட்டுவெவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, எலபாத்த – கொடாமுல்ல சந்திக்கு அருகில் கெப் வண்டியொன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியதில்; நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
இரத்தினபுரி, உடனிரிஹல்ல பகுதியை சேர்ந்த 35 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.