இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் தேர்வுக்கான வாக்கெடுப்புகள் நிறைவடைந்துள்ள நிலையில் வாக்கெண்ணும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
திருகோணமலை நகரசபை மண்டபத்தில் இன்று இரகசிய வாக்கெடுப்பு நடைபெற்றது.
கட்சியின் தலைவர் பதவிக்காக நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் ஸ்ரீதரன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீனிதம்பி யோகேஸ்வரன் ஆகியோர் போட்டியிட்டுள்ளனர்.
இந்நிலையில் சற்று நேரத்தில் புதிய தலைவர் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.