இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் நேற்று (20.01) 19 வயதிற்குற்பட்ட உலகக்கிண்ணத்தின் 3 ஆவது போட்டி புலும்பொன்டெய்னில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா அணி 84 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
முதலில் துடுப்பாடிய இந்தியா அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 251 ஓட்டங்களை பெற்றது. இதில் அதர்ஷ் சிங் 76(96) ஓட்டங்களையும், உதய் சஹரன் 64(94) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் மருப் மிரிதா 5 விக்கெட்களையும், சௌதர் MD ரிஸ்வான், மஹ்புசுர் ரஹ்மான் ரப்பி ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.
பதிலுக்கு துடுப்பாடிய பங்களாதேஷ் அணி 45.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 167 ஓட்டங்களை பெற்றது. இதில் மொஹமட் ஷிஹாப் ஜேம்ஸ் 54(77) ஓட்டங்களையும், அரிபுல் இஸ்லாம் 41(71) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் சௌமி பாண்டி 4 விக்கெட்களையும், முஷீர் காண் 2 விக்கெட்களையும், ராஜ் லிம்பன்னி, அர்ஷின் குல்கர்னி, பிரியன்ஷு மொலியா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.
இந்த போட்டியின் நாயகனாக அதர்ஷ் சிங் தெரிவு செய்யப்பட்டார்.
இங்கிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளுக்கிடையில் நேற்று (20.01) 19 வயதிற்குற்பட்ட உலகக்கிண்ணத்தின் 4 ஆவது போட்டி பொடசெப்ஸ்ருமில் நடைபெற்றது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்களினால் வெற்றி பெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
முதலில் துடுப்பாடிய ஸ்கொட்லாந்து அணி 49.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 174 ஓட்டங்களை பெற்றது. இதில் ஒவன் கௌவ்ல்ட 48(61) ஓட்டங்களையும், ஜேமி டங் 40(70) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் பர்ஹன் அஹமட், லக் பென்கென்ஸ்டீய்ன் ஆகியோர் தலா 3 விக்கெட்களையும், செபாஸ்டியன் மோர்கன், டொமினிக் கெல்லி, ஜெய்ன் டென்லி ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.
பதிலுக்கு துடுப்பாடிய இங்கிலாந்து அணி 26.2 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 178 ஓட்டங்களை பெற்றது. இதில் பென் மக்கென்னி 88(68) ஓட்டங்களையும், ஜெய்ன் டென்லி 40(50) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் இப்ரஹிம் பைய்ஸல் 2 விக்கெட்களை கைப்பற்றினார்.
இந்த போட்டியின் நாயகனாக பென் மக்கென்னி தெரிவு செய்யப்பட்டார்.
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையில் நேற்று (20.01) 19 வயதிற்குற்பட்ட உலகக்கிண்ணத்தின் 5 ஆவது போட்டி ஈஸ்ட் லண்டனில் நடைபெற்றது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி 181 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 284 ஓட்டங்களை பெற்றது. இதில் ஷஹ்சைப் கான் 106(126) ஓட்டங்களையும், சாட் பைக் 55(52) ஓட்டங்களையும், ரியாஸ் உல்லா 46(49) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் கலில் அஹமட் 4 விக்கெட்களையும், பஷிர் அஹமட் 2 விக்கெட்களையும், நசீர் கான் மரூப் கில், AM கசன்பர் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
பதிலுக்கு துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் அணி 26.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 103 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. நுமன் ஷா 26(31) ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சீல் உபைத் ஷா 4 விக்கெட்களையும், மொஹமட் சீஷான் 3 விக்கெட்களையும், அமிர் ஹசன், அஹமட் ஹுசைன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.
இந்த போட்டியின் நாயகனாக ஷஹ்சைப் கான் தெரிவு செய்யப்பட்டார்.