வேலையின்மை விகிதம் அதிகரிப்பு..!

பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டில் வேலையின்மை விகிதம் அதிகரித்துள்ளதாக நிதியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் வேலையின்மை விகிதம் 5. 2வீதமாக அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டின் முதல் காலாண்டில், இலங்கையில் வேலையின்மை விகிதம் 4.7 வீதமாக காணப்பட் நிலையில் இரண்டாவது காலாண்டில், 5.2 வீதமாக அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டில் மாத்திரம் 15 முதல் 24 வயதுடைய இளைஞர்களில் 25.8 சதவீதமானோர் வேலையை இழந்துள்ளதாகவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply