பெலியத்த பிரதேசத்தில் ஐந்து பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு 06 விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும், தென் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தற்போது 06 குழுக்களை நியமித்துள்ளதாகவும், அதன் அடிப்படையில் தென் மாகாண குற்றப்பிரிவு, தங்காலை குற்றப் புலனாய்வுப் பிரிவு, தங்காலை தலைமையக பொலிஸ் பரிசோதகரின் கீழ் தனியான குழு, பெலியத்த பொலிஸ் குழு, விசேட அதிகாரிகள் குழு என 06 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.