பாடசாலை மாணவர்களுக்கான அறிவித்தல்

பகுதி முறையில் மாணவர்கள் பாடசாலைக்கு அழைக்கப்படுவார்கள் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் திங்கட்கிழமை (22/11) கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் தரம் 6 முதல் 9 வரையான மாணவர்கள் தற்போது அமுலிலுள்ள சுகாதார வழிகாட்டுதலின் கீழ் பாடசாலைக்கு அழைக்கப்படுவார்கள் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி ஒரு வகுப்பில் 20 க்கும் குறைவான மாணவர்கள் இருந்தால் அவர்கள் தினசரி பாடசாலைக்கு அழைக்கப்படுவார்கள் என்றும், 40 வரையான மாணவர்கள் இருக்கும் வகுப்பிற்கு ஒரு நாளில் ஒரு பகுதி மாணவர்களும் மறு நாள் அடுத்த பகுதி மாணவர்களும் அழைக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை மாணவர்களுக்கான அறிவித்தல்

Social Share

Leave a Reply