வெளிநாட்டு தொழில்வாய்ப்பினை பெற்றுத் தருவதாகக் கூறி 83 இலட்சத்துக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த இரண்டு சந்தேகநபர்கள் கந்தானை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக குளியாப்பிட்டிய விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் (38) மற்றும் (64) வயதுடைய ஜா அல மற்றும் கொஸ் பெலென பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என மேலும் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்களில் ஒருவர் ஹெட்டிபொல நீதவான் நீதிமன்றில் பிடியாணை பிறப்பிகப்பட்ட பெண் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் குளியாபிட்டிய விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்