புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட வரி செலுத்துவோர் அடையாள எண்ணை (TIN) எளிமைப்படுத்த நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது.
தனிநபர் ஒருவரின் தேசிய அடையாள அட்டை (NIC) இலக்கத்தை, குறிப்பிட்ட நபரின் வரி செலுத்துவோர் அடையாள இலக்கமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
2024 பெப்ரவரி 01 முதல் வரி அடையாள எண்ணை நடைமுறைப்படுத்துவதற்கான ஆயத்தங்கள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 01 திகதி முதல் நடப்புக் கணக்கைத் திறக்கும்போது, கட்டிடத் திட்ட அனுமதி கோரும்போது, மோட்டார் வாகனத்தைப் பதிவுசெய்யும்போது, உரிமத்தைப் புதுப்பிக்கும்போது, நிலத்தின் உரிமையைப் பதிவுசெய்யும்போது TINஐச் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம் என்று அரசாங்கம் மேலும் கூறியது.