கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் 838 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 549 சந்தேக நபர்களும் குற்றப் பிரிவுக்கு பரிந்துரைக்கப்பட்ட பட்டியலில் இருந்த 289 சந்தேக நபர்களும் இதில் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களில் 05 சந்தேகநபர்கள் தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் மேலதிக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், மேலும் 10 போதைக்கு அடிமையானவர்கள் புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சுற்றுவளைப்பின்போது, 211 கிராம் ஹெராயின், 78 கிராம் ஐஸ், 16 கிலோ 600 கிராம் கஞ்சா, 9,974 கஞ்சா செடிகள், 493 கிராம் மாவா, 36 கிராம் மதன மோதகம், கைப்பற்றப்பட்டுள்ளன.