லபுகம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் தந்தை மற்றும் மகன் பலி..!

ஆனமடுவ – நவகத்தேகம பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் தந்தை மற்றும் மகன் உயிரிழந்துள்ளனர்.

லபுகம பகுதியில் இன்று விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் பலத்த காயமடைந்த தாய் புத்தளம் வைத்தியசாலையின் தீவிர சிசிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரவூர்தி ஒன்றுடன் மோதியதால் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

Social Share

Leave a Reply