பிரிட்டிஷ் மன்னர் மூன்றாம் சார்லஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.
புரோஸ்டேட் விரிவாக்கம் காரணமாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
மன்னர் தனது சொந்த திட்டமிட்ட சிகிச்சைக்கு முன்னதாக இன்று காலை வைத்தியசாலையில் தனது மருமகளை சந்தித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மன்னர் ஒரு இரவாவது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பார் என பக்கிங்ஹாம் அரண்மையை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.