நுவரெலியாவில் மர்மமான முறையில் உயிரிழந்த நபரொருவர் சடலமாக மீட்பு..!

நுவரெலியா கிரகரி வாவியிலிருந்து இன்று சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த வாவியில் படகு சவாரியில் ஈடுபடுவோர் வழங்கிய தகவலுக்கமைய சம்பவ இடத்துக்கு பொலிஸார் வருகை தந்ததையடுத்து சடலம் மீட்க்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாவலப்பிட்டி கெடபுல்லா பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய நபரொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நுவரெலியா மாவட்ட நீதவான் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டதையடுத்து சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply