இலங்கை, ஆப்கானிஸ்தான் டெஸ்ட் முதல் நாள் நிறைவு

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஒற்றை டெஸ்ட் போட்டி கொழும்பு SSC மைதானத்தில் இன்று (02.02) ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.

முதலில் துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் அணி 62.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 198 ஓட்டங்களை பெற்றது. இதில் ரஹ்மத் ஷா 91(139) ஓட்டங்களையும், நூர் அலி சட்ரன் 31(46) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் விஸ்வ பெர்னாண்டோ 4 விக்கெட்களையும், பிரபாத் ஜயசூர்ய, அசித்த பெர்னாண்டோ ஆகியோர் தலா 3 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.

பதிலுக்கு துடுப்பாடி வரும் இலங்கை அணி 14 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 80 ஓட்டங்களை பெற்றது. இதில் திமுத் கருணாரத்ன ஆட்டமிழக்காமல் 42(37) ஓட்டங்களையும், நிஷான் மதுஷ்க ஆட்டமிழக்காமல் 36(48) ஓட்டங்களையும், பெற்றனர்.

அணி விபரம்

இலங்கை

திமுத் கருணாரட்ன, நிஷான் மதுஷ்க, குஷல் மென்டிஸ், அஞ்சலோ மத்தியூஸ், டினேஷ் சந்திமால், தனஞ்ஜய டி சில்வா(தலைவர்), சதீர சமரவிக்ரம, சமிக்க குணசேகர, பிரபாத் ஜயசூர்ய, விஸ்வ பெர்னாண்டோ, அசித்த பெர்னான்டோ

ஆப்கானிஸ்தான்

இப்ரஹிம் சட்ரன், நூர் அலி சட்ரன், ரஹ்மத் ஷா, ஹஷ்மதுல்லா ஷஹிடி(தலைவர்), நசிர் ஜமால், இக்ரம் அலிகில், சியா உர் ரெஹ்மான், குயைஸ் அஹமட், நிஜாத் மசூத், மொஹமட் சலீம், நவீத் சட்ரன்

Social Share

Leave a Reply