அதிக செலவு செய்து தயாரிக்கும் உணவுகளை அவர்கள் வீண் செய்வதில்லையே.. ஒன்று குடும்பத்தினரிடம் பகிர்ந்து உண்வார்கள் இல்லையேல் அருகில் இருக்கும் ஆதரவற்றோர் இல்லம் அல்லது முதியோர் இல்லத்திற்கு கொடுத்துவிடுவார்கள் ஆனால் வீண் மட்டும் எப்பொழுதும் செய்யமாட்டார்கள்.
இப்படி பிரம்மாண்டமாக செலவு செய்து உணவு தயாரிக்கும் கானொளியை இந்தியாவில் முதன் முதலில் பதிவேற்றம் செய்தவர்கள் Village Food factory டாடி ஆறுமுகம் சமையல் தான். அப்போது அவர்கள் அப்லோடு செய்த அனைத்து பிரம்மாண்ட உணவு வீடியோக்களுக்கு லட்சக்கணக்கான பார்வையாளர்கள், வீவ்ஸ் கிடைத்தன. பெரும்பாலும் வெளிநாட்டினரே அதிகம் பார்த்தனர். அவர்களுக்கு இந்திய கிராமத்தில் செய்த உணவு டாடி ஆறுமுகத்தின் வெகுளித்தனமும் நன்கு பிடித்துப் போனது.
Youtube இந்தியாவை பொறுத்த வரை மற்ற நாடுகளை காட்டிலும் வருமானம் மிக குறைவு. இந்தியாவில் தயாரித்து இந்தியர்களே பார்க்கும் வீடியோவிற்கு வருவாய் குறைவு. இந்தியாவில் அப்லோடு செய்த வீடியோவிற்கு வெளிநாட்டினர் பார்வைகள் அதிகமாக கிடைத்தால் வருவாய் கணிசமாக உயரும்.
இரண்டு இந்திய யூடியுப்பர்களை எடுத்துக்கொள்ளுங்கள். இருவருக்கும் ஒரே அளவு சப்ஸ்கிரைபர்கள். வீடியோவிற்கு பார்வைகள் வருகிறது. ஆனால் ஒருவர் பதிவேற்றம் செய்யும் கானொளியை இந்தியர்கள் அதிகம் பார்ககிறார்கள் இன்னொருவரின் கானொளியை வெளிநாட்டினர் அதிகமாக பார்க்கிறார்கள் என்றால் இவருக்கே அதிக வருமானம் வரும். பின் இவர்களுக்கு கிடைக்கும் வருமானம் உணவு செய்த செலவு போக லாபமானதாகவே இருந்திருக்கு என பல பேட்டிகளில் சொல்லி இருக்கிறார்கள். வளர்ந்த பின் மாதம் ஒரு லட்சத்திற்கும் மேல் வருமானம் வந்தது என்றும் கூறினர்.
Village Food factory-யை நகலெடுத்து ஏகப்பட்ட அதிக அளவு உணவு தயாரிக்கும் யூடியுப் சேனல்கள் உருவாகிவிட்டன. முதன் முதலில் சில வருடங்களுக்கு முன் ஆரம்பித்தவர்களுக்கு நல்ல பார்வைகள் கிடைத்தன இப்போதும் கிடைக்கிறது. ஆனால் இப்போது ஒருவர் நானும் இதைப்போல பிரம்மாண்டமாக உணவு செய்து அதை அப்லோடு செய்கிறேன் என வந்தால் அவர்களுக்கு பார்வைகள் குறைவாகவே இருக்கும். ஏனென்றால் எக்க சக்க சேனல்கள் வந்துவிட்டன ஏற்கனவே எண்ணற்ற வித விதமான காளொளிகளை இவர்கள் தந்துவிட்டார்கள். இவர்களிடத்தில் இருந்து வேறுபட்டு புதிதாக ஒரு கண்டென்ட் கொடுத்தால் மட்டுமே வருமானம் பார்க்க முடியும் இல்லையேல் ஒவ்வொரு வீடியோவிற்கும் செலவு தான் கூடி கொண்டே போகும்.
நீங்கள் நன்கு அறியப்பட்ட பிரபலமாக இருந்தால் உங்களுக்கு பார்வைகள் வரும் வருமானமும் வரும்.
நீங்கள் ஒரு யூடிப்பராக நன்கு அறியப்பட்டு உங்களுக்கென ஒரு வட்டம் இருப்பின் நீங்கள் சோசியல் மீடியா இன்ப்ளூவன்சர் ஆகி விடுவீர்கள். பல நிறுவனங்கள் உங்களிடத்தில் அவர்களின் பிராண்டை விளம்பரபடுத்த அனுகும். அதற்கு நீங்கள் ஒரு தொகையை பெறுவதன் மூலம் வருமானம் ஈட்டுகிறீர்கள். பல முன்னனி யூடிப்பர்களுக்கு பாதி வருவாய் இதன் மூலமாகவே கிடைக்கிறது.